•இவர் பிறந்த சில தினங்களிலேயே அவரது தந்தை இறந்து விட்டார். அருணகிரிநாதருக்கு ஒரு மூத்த சகோதரி உள்ளார். அருணகிரிநாதரின் மூத்த சகோதரி, அருணகிரிநாதருக்கு மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து கொடுத்து வளர்த்து விட்டார்.
•அருணகிரிநாதர் இளமையிலேயே நல்ல கல்வி கற்று இலக்கிய, இலக்கணங்களைக் கற்று கொண்டார். இவருக்கு சரியான வயதில் திருமணமும் நடந்தது. ஆனால், அருணகிரிநாதருக்கு ஒரு சில கெட்ட பழக்கங்களும் இருந்து வந்தது.
•சிறு வயதில் இருந்தே பெண்ணாசை கொண்டவராய் இருந்தமையால் வீட்டில் அழகிய மனைவி இருந்தும், பெண்களின் தொடர்பு அதிகமாய் இருந்தது. எந்நேரமும் காமத்திலே மூழ்கி இருந்தமையால் சொத்தை இழந்ததும் மட்டுமில்லாமல், பெரும் நோயும் வந்தது.
•இவரது மனைவி இவரை அடியோடு வெறுத்து ஒதுக்கி விட்டார். அவரது, சகோதரியும் இவரை கோபத்துடன் பேச வீட்டில் இருந்து வெளியேறி கால் போன போக்கில் சென்றார்.
•அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்டு, அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும் சொல்லி, சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் கோரி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்து அனுப்பி வைத்தார்.
•இருந்தாலும், என்ன செய்வது என்று தெரியாமல், குழப்பத்தில் திருவண்ணாமலை கோபுரத்தின் மீது ஏறி கீழே குத்தி உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது, இரு கரங்கள் அவரை தாங்கி, அருணகிரி நில் என்று சத்தம் எழும்பியது.
•அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யார் எனப் பார்க்கும்போது, வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான்.
•முருகர், “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார்.
•சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது. மேலும், முருகப் பெருமான், அருணகிரிநாதரின் தொழுநோயைக் குணப்படுத்தினார். அதுமட்டுமில்லாமல், பக்தியின் பாதையையும் அவருக்கு காட்டினார்.